தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆளும் கட்சியான திமுக மாற்றுக் கட்சியினரை தம் கட்சியில் இணைக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை ஆட்சியைப் பிடிப்பதற்கு பல வியூகங்களை வகுத்து வருகிறது. ஆனால் அதிமுகவில் தலைமை பொறுப்பு யாரிடம் உள்ளது என்று தெரியாமல் தொடர்ந்து உட்கட்சி மோதல்கள் வெடித்துக்கொண்டிருக்கிறது.
அதனைப் போல தான் பாமகவிலும் தந்தை மகனிடையே ஆன பிரச்சனை நாளுக்கு நாள் முற்றிக்கொண்டே வருகிறது. தந்தைக்கு மகனுக்கும் ஏற்பட்ட பிரச்சனை ஆல் சிதறிக்கிடக்கும் பாமக இரண்டு திசையில் செயல்பட்டு வருகிறது. அதேசமயம் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் உண்மையான பாமக யாரிடம் உள்ளது என்பது போன்ற கேள்விகளும் உள்ளது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திமுகவுக்கு ஆதரவு செலுத்தி வருவதால் அவர் அந்த கூட்டணிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மகன் அன்புமணி அதிமுக பக்கம் நிற்பதை கண்கூடாகவே பார்க்க முடிகின்றது.
ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் அன்புமணி இபிஎஸ் இடம் ஒரு நிபந்தனை விதித்துள்ளாராம். அதாவது பாமக மற்றும் அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட வேண்டும் என்றால் பாமகவிற்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளையும் ஆட்சியில் பங்கையும் தர வேண்டும் என்று கூறியுள்ளதாக அன்புமணியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக கொங்கு மண்டலத்தை கேட்டு வற்புறுத்தி வரும் நிலையில் அன்புமணியின் இந்த நிபந்தனை இபிஎஸ்ஸுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
பிஹார் தேர்தல் முடிவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள்…
இந்தியாவில் டிஜிட்டல் கடன் வழங்கல் வேகமாக வளர்ந்தாலும், மோசடி ஆபத்தும் அதிகரித்துள்ளது. போலி செயலிகள், குறுஞ்செய்திகள், அபத்தமான சலுகைகள் மூலம்…
நேற்று நடைபெற்ற போர்ச்சுகல்லின் FIFA உலகக் கோப்பை 2026 தகுதிச் சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்ச்சை சைகையை கிளப்பினார். அதாவது…
அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கெனவே,…
பிஹார் தேர்தல் முடிவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள்…
வேத ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் தைரியம், வீரம், செல்வம், கோபத்தைக் குறிக்கும். டிசம்பரில் செவ்வாய் தனுசு ராசிக்கு மாறுவதால் சில…