வெயிட் அன்ட் சீ..! “விரைவில் கூட்டணியை அறிவிப்பேன்” பரபரப்பை கிளப்பிய அன்புமணி..!!

By Soundarya on புரட்டாதி 4, 2025

Spread the love

சேலத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “பாமக தொண்டர்கள் எதிர்பார்க்கும் கூட்டணியானது விரைவில் அறிவிக்கப்படும். அடுத்த நான்கு மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் . அடுத்தது நம்முடைய ஆட்சிதான். அனைவரும் ஒன்றாக செயல்பட்டு நல்லது செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் சாதிவாரி காணப்படும் நடத்த வேண்டும். அனைத்து சமுதாயமும் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளத்தான் இந்த கணக்கெடுப்பு. இது சாதி பிரச்சினையில்லை. சமூக பிரச்சனை” என்று கூறியுள்ளார்.