அதிரடியாக நடந்த தலைவர் போட்டி!… நேரடியாக மோதிக் கொள்ளும் அசிம் மற்றும் அமுதவாணன்!… பரபரப்பான ப்ரோமோ வீடியோ இதோ!…

அதிரடியாக நடந்த தலைவர் போட்டி!… நேரடியாக மோதிக் கொள்ளும் அசிம் மற்றும் அமுதவாணன்!… பரபரப்பான ப்ரோமோ வீடியோ இதோ!…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்றைய நாளின் முதல் பிரமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஐந்து சீசன்களை கடந்து ஆறாவது சீசனில் தற்பொழுது காலடி எடுத்து வைத்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தற்பொழுது 78 நாட்களைக் கடந்து இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளது இந்த நிகழ்ச்சி. இந்தநிலையில் இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு தனலட்சுமி வெளியேற்றப்பட்டுள்ளார். 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

இந்நிலையில் இன்றைய நாளின் முதல் பிரமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. வார தொடக்க நாளில் ஒவ்வொரு வாரமும் தலைவருக்கான டாஸ்க் நடத்தப்படுவது வழக்கம் .அந்த வகையில் இந்த வாரத்திற்கான தலைவர் டாஸ்க் இடம் பெற்றுள்ளது . அதில் அசீம் மற்றும் அமுதவாணன் ஆகியோருக்கிடையே கடுமையான போட்டி நடைபெற்றுள்ளது.

அதாவது இருவரையும் ஒன்றாக சேர்த்து ஒரு கயிறு கட்டப்பட்டிருக்கும். தனித்தனியாக ஒரு பெரிய பெட்டியும் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே கீழே கிடக்கும் கிப்ட்டுகளை எடுத்து அந்த பெரிய பெட்டியினுள் போட வேண்டும். அதிகமான கிப்ட்டுகளை யார் சேர்க்கின்றாரோ அவரே வெற்றியாளர் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இன்றைய நாளின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ….

Begam