அம்மாடி!.. எவ்ளோ பெரிய வீடு!… பிக் பாஸ் பிரபலம் ஜி பி முத்துவின் வீட்டை பார்த்திருக்கீங்களா?… வைரலாகும் புகைப்படங்கள் இதோ!….

By Begam

Published on:

பிக் பாஸ் பிரபலமான ஜி பி முத்து தற்பொழுது கட்டியுள்ள பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசனில் காலடி எடுத்து வைத்துள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 10 போட்டியாளர்களே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் முக்கியமான போட்டியாளராக பார்க்கப்பட்டவர் ஜி பி முத்து.

   

இவர் சமூக வலைத்தளங்களில் கிடைத்த பிரபலம் மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தனது எதார்த்தமான பேச்சினால் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தார். இவரது ரசிகர்கள் பிக் பாஸ் டைட்டிலை ஜிபி முத்து தான் வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.. ஆனால் தனது மகனின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குடும்பத்தின் மீது கொண்ட பாசம் காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு சில வாரங்களிலேயே வெளியேறினார்.

இதை தொடர்ந்து இவர் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் ஜி பி முத்து பெரிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு சிம்பிளாக பால் காய்ச்சி உள்ளார். விஐபிகள் யாரும் இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை. இவர் தானே குத்துவிளக்கிற்கு பூ வைத்து பூஜையை செய்துள்ளார்.

இதை தொடர்ந்து நாளும் நேரமும் இல்லாத காரணத்தால் விஐபிகளை கூப்பிட முடியவில்லை சிம்பிளாக பால் காய்ச்சிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் தானே பால் காய்ச்சி தன் குடும்பத்தினருடன் சேர்த்து இனிப்பு சாப்பிட்டு கொண்டாடியுள்ளனர். தற்பொழுது ஜீபி முத்து புதிய வீட்டில் பால் காய்ச்சும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்…..