அம்மாடி!.. மூன்று கிலோ தங்கத்துல நெக்லஷா…பிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட புகைப்படம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….

பிரபல நடிகர் நகுலின் மனைவி சுருதி தன் கழுத்தில் மூன்று கிலோ தங்க நெக்லஸ் ஒன்றை அணிந்து தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2003-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படத்தில் ஜூஜூ என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தேவயாணியின் தம்பி நகுல். 2008-ம் ஆண்டு ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது.

தொடர்ந்து மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்த நகுல் யுவன், ஹாரிஸ், தமன் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களையும் பாடி பின்னணி பாடகராக வலம் வந்தார்.கடந்த 2016-ம் ஆண்டு தான் காதலித்து வந்த ஸ்ருதி பாஸ்கர் என்ற பெண்ணை நகுல் திருமணம் செய்தார்.இவர்களுக்கு ஆதிரா என்ற அழகான பெண் குழந்தையும்  உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர்கள் அவ்வப்போது தங்களது புகைப்படங்களையும் தங்கள் குழந்தையின்  புகைப்படத்தையும்  இணையத்தில் பதிவு செய்வர். இதை தொடர்ந்து தற்பொழுது நடிகர் நகுலின் மனைவி சுருதி தன் கழுத்தில் மூன்று கிலோ தங்கத்தில் ஆன நெக்லஸ் ஒன்றை அணிந்துள்ளார்.

இந்த நெக்லஸ் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வடிவத்தில் உள்ளது. தற்போது இந்த புகைப்படத்தை அவர் தனது instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த  ஆச்சரியத்தில் உள்ளனர்.