அம்மாடி!.. இத்தனை கோடியா?… சென்னையில் முக்கிய இடத்தில் பிரம்மாண்ட வீட்டை வாங்கிய நடிகர் சந்தானம்!… விலையை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!…

By Begam

Published on:

நடிகர் சந்தானம் வாங்கிய பிரம்மாண்ட வீட்டின் விலை குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சந்தானம். இவர் தற்பொழுது நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகன் வேடத்திலும் நடித்து கலக்கி வருகிறார். தனது திரைப்பயணத்தில் சிம்புவுடன் சேர்ந்து காதல் அழிவதில்லை, மன்மதன், வல்லவன், வானம் என பல்வேறு படங்களில் பணியாற்றி உள்ளார்.

   

இதை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக சந்தானம்  வலம் வரத் தொடங்கினார். குறுகிய காலகட்டத்திலேயே விஜய், அஜித், ரஜினி, சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னனாக  ஜொலித்தார்.

தமிழ் சினிமாவில் இவரரின் காமெடிக்கென்று ஓடிய படங்கள் ஏராளம் உள்ளன. இதைத்தொடர்ந்து படிப்படியாக நகைச்சுவை வேடங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சந்தானம் ஹீரோவாக 2014ல் அவதாரம் எடுத்தார். முதன் முதலில் இவர் தமிழ் திரையுலகில் ஹீரோவாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

 

இதை தொடர்ந்து டிக்கிலோனா, சபாபதி என பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.இவர்  நடிப்பில் இந்த வருடம் குளுகுளு, ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சந்தானம் வாங்கிய பிரம்மாண்ட வீடு குறித்த  தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் சந்தானம் சென்னையின் முக்கிய இடமாக கருதப்படும் மறைந்த ஜெயலலிதா, ரஜினிகாந்த், தனுஷ் என பலர் இருக்கும் போயஸ் கார்டன் இடத்தில் ஒரு பிரம்மாண்ட வீடு விலைக்கு வந்துள்ளது. இதனை பல கோடி கொடுத்து நடிகர் சந்தானம் வாங்கியுள்ளாராம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் நடிகர் சந்தானத்துக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.