“நாய்க்கு இருக்கும் மரியாதை கூட தவெக-வில் இல்லை”… விஜய்யை அலறவிட்ட அஜிதா ஆக்னல்…. நடந்தது என்ன..?

By Nanthini on சித்திரை 17, 2026

Spread the love

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகி திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியின் தலைமை மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார். தவெகவில் ஒரு நாய்க்கு கொடுக்கக்கூடிய மரியாதையைக்கூட தனக்கு அளிக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்த அவர், கட்சியின் தலைவரான விஜய்யை நேரில் சந்தித்து முறையிட அவரது காரை மறித்து முயன்றபோதும், தன் குறைகளை அவர் கடைசி வரை கேட்கவே இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் நிலவும் உட்கட்சி அரசியல் குறித்தும், கட்சிப் பதவிகள் மற்றும் வரவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளர் சீட்டுகள் அனைத்தும் தகுதியின் அடிப்படையில் அல்லாமல், பெரும் தொகையைப் பணம் வாங்கியே விற்கப்படுவதாகவும் அவர் அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.