நடிகை ரோஜாவின் திருமணத்தில் கலந்து கொண்ட அஜித் ஷாலினி!… தல செம ஸ்டைலா இருக்காரே!… வைரல் புகைப்படம் இதோ!…

By Begam

Published on:

நடிகை ரோஜாவின் திருமணத்தில் கலந்து கொண்ட நட்சத்திர தம்பதி அஜித் ஷாலினியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘செம்பருத்தி’ படம் மூலம் அறிமுகமானார் ரோஜா. இயக்குனர் ஆர்கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

   

90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் சில ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக தீவிர அரசியலில் தற்போது ஈடுபட்டு வருகிறார். ஆந்திர மாநிலம் நகரி  தொகுதியின் எம்எல்ஏவாகவும்,, மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகவும் தற்போது பதவி வகித்து வருகிறார்.

நடிகை ரோஜா தற்பொழுது முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நடிகை ரோஜா 2002ல் இயக்குனர் செல்வமணி திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண விழாவில் பல முக்கிய திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இத்திருமணத்தில் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் ‘தல அஜித் செம ஸ்டைலாக இருக்கிறார்’ என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….