“அப்படி நடிக்க ஆசை” கூப்பிட்டால் நிச்சயமாக நடிப்பேன்… நடிகர் அஜித் ஓபன் டாக்..!!

By Soundarya on ஆடி 5, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். சுமார் இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் அதன் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அஜித் ரசிகர்களால் இந்த திரைப்படம் பெரிதும் கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 64 வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க போவதாக உறுதியாகிவிட்டது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேர்ல்ட்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்க உள்ள நிலையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் Fast and Furious, F1 படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க அழைத்தால் நிச்சயமாக நடிப்பேன் என்று நடிகர் அஜித் கூறியுள்ளார்.

   

கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்ட அஜித் துபாயில் நடந்த 24H 2025 ரேஸ், இத்தாலியில் நடந்த முகேலா கார் ரேஸிலும் கலந்து கொண்டார். ஆனால் படங்களில் ரேஸ் தொடர்பான சிறிய காட்சிகளில் நடித்திருந்தாலும், முழு நீள படமாக அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் தான் அவருக்கு அந்த ஆசை இருப்பதை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.