படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை கேரவனில் இருந்த படி சந்தித்த அஜித்…. வைரலாகும் வீடியோ இதோ….

‘துணிவு’ பட சூட்டிங் ஸ்பாட்டில் தனது கேரவனில் இருந்தபடி நடிகர் அஜித் தனது ரசிகர்களை சந்தித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவரின் திரைப்படங்கள் வெளியானால் அந்த நாளையே ரசிகர்கள் திரையரங்கையே கொண்டாட நாளாக மாற்றி விடுவார்கள். அந்தளவிற்கு தமிழகம் முழுவதும் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் நடிகர் அஜித்.

மாஸ் ஹீரோவான அஜித் தனது போட்டி நடிகரை போல எப்போதும் ஒரே பாணியில் தனது படத்தை ரசிகர்களுக்கு கொடுக்காமல், ஹீரோ, வில்லன் என வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவார். அப்படி அவர் நடித்த படங்களே அவருக்கு மிக பெரிய மாஸ் ரசிகர்கள் கூட்டம் உருவாக காரணமாக இருந்தது.

பல வெற்றி படங்களில் நடித்துள்ள தல அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம்  ‘துணிவு’. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் நிறைவு பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற பெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அஜித்தை காண ரசிகர்கள் கூட்டம் அலைகடலென திரண்டது.

இதனைக் கண்ட நடிகர் அஜித்  தனது ரசிகர்களை கேரவனில் இருந்து சந்தித்து பேசிவிட்டு சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி  ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ….