பண மோசடி வழக்கில் நடிகர் அஜய் வாண்டையார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் எம்எல்ஏ ஒருவரிடம் சுமார் 3.5 கோடி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இன்று பெங்களூரு விமான நிலையத்தில் அஜய் வாண்டையாரை கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் நடைபெற்ற தகராறில், அஜய் வாண்டையார் மதுபோதையில் மற்றொரு தரப்பினரை தாக்கி வன்முறையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அஜய் வாண்டையார் மீது பட்டினப்பாக்கம், எழும்பூர் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த புகார் தொடர்பாக அஜய் வாண்டையார் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே இது போன்ற வழக்கில் சிக்கியதால் இவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
