ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ரம், கௌரவத் தோற்றத்தில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த திரையில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கிற படம் தான் லால் சலாம். இப்படம் விருது வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த வருடத்தின் மிகச்சிறந்த டாப் 10 படங்களில் இது ஒன்றாக இருக்கும்.
தற்போது இப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது அந்த நிகழ்ச்சியில் லால் சலாம் படம் எப்படி உருவான கதை என்று கூறினார். லால் சலாம் பட கேமரா மேன் விஷ்ணு அவர்களை எனக்கு 3 படத்தில் இருந்து தெரியும், அப்பவே அவரு நிறைய எழுதுவாரு புக் எல்லாம் படிப்பாரு, ஆனா எனக்கு பெருசா அவர் கிட்ட பழக்கம் இல்லை, சரியா பேசிக்க மாட்டோம், அவர் அதிகமா பேச மாட்டார் அவர் வேலையில் மட்டும் தான் கவனமா இருப்பாரு,
அதுக்கப்புறம் நான் ஒரு மியூசிக் ஆல்பம் பண்றதுக்கு கேமரா மேன் நிறைய பேர் கிட்ட பேசினேன் ஆனா யாரும் முன் வரல, அப்போ எனக்கு பெருசா படம் பண்றதுக்கும் இன்ட்ரெஸ்ட்ல இல்ல, அப்போ இந்த மியூசிக் ஆல்பம் பண்றதுக்கு கேமராமேன் தேடிட்டு இருந்த டைம்ல தான் விஷ்ணு எனக்காக முன் வந்தாரு, வந்து எனக்காக எல்லாத்தையும் பண்ணி கொடுத்து முடித்துக் கொடுத்தாரு, முடிச்சு குடுத்துட்டு என்கிட்ட இரண்டு கதை இருக்கு மேம் உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருந்தா சொல்லுங்க, இந்த ரெண்டு கதையில ஏதாவது கதையை படம் பண்ணலாம்னு என்கிட்ட கதையை சொன்னாரு, எனக்கும் பெருசா அட்ரஸ் இல்ல ஆனா சொல்லுங்க கேட்போம் அப்படின்னு ரெண்டு கதையும் கேட்டேன்,

எனக்கு அந்த ரெண்டு கதைல ஒரு கதை புடிச்சது அந்த ஒரு கதை தான் இந்த லால் சலாம் படத்தின் கதை என்று ஐஸ்வர்யா ரஜினி காந்த் அவர்கள் மேடையில் பேசினார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் படத்தின் கதை விஷ்ணு அவர்கள் எழுதிய கதை தான் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மேடையில் வெளிப்படையாக பேசி உள்ளார்.