‘3’ படம் ஓடாததற்கு காரணமே இந்த விஷயம் தான்.. அதுதான் படத்தை முழுசா மூடி மறைச்சிருச்சு.. வெளிப்படையாக பேசி ஐஸ்வர்யா..

By Ranjith Kumar

Updated on:

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ராக்ஸ்டார் அனிருத் இசையில் வெளியான 3 திரைப்படம் இந்தியா சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. தமிழ்நாட்டிலிருந்து பாலிவுட் வரை அப்படத்தில் இருந்த பாடல் “ஒய் திஸ் கொலவெறி” மூளை முடுக்கெல்லாம் பேச வைத்தது, திரையரங்குகளில் தீயாக ஓடியது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை படத்தில் வரும் பாடல்களை மிகவும் வரவேற்று கொண்டாடி வந்தார்கள். ராக்ஸ்டார் அனிருத் அவர்களுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கும் இதுதான் முதல் படம். முதல் படத்திலேயே இவர்கள் காம்போ மிக கனகச்சிதமாக பொருந்தி இருந்தது.

தமிழ் சினிமா இப்படி ஒரு கருத்துள்ள கமர்ஷியல் படத்தை பார்த்ததில்லை இப்ப படம் வெளியில் பேசப்பட்டதை விட இப்படத்தில் வரும் பாடல்கள் தான் மிக பிரம்மாண்டமாக பேசப்பட்டது. சமீபத்தில் இன்டர்வியூரில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படத்தைப் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.ஒரு சில நிகழ்வுகள் எப்படி நடக்குது என்றே தெரியாது, அது நம்மளை மீறி நடக்கும், அதுக்கு நம்ம பிரிப்பேர் பண்ணாலும் அது வந்து நம்மை தாக்கும் போது நமக்கு பேலன்ஸ் பண்ண முடியாது, ஷாக் அடிக்கிற மாதிரி இருக்கும், நடக்குற போக்குல அதை விட்டுறணும், அந்த மாதிரி நடந்த ஒன்றுதான் இந்த படம்.

   

அந்த மாதிரி தான் “why this Kolaveri” பாட்டும் ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் இந்த படத்துக்கு பார்த்தீங்கன்னா, அது ரொம்ப பிளஷர் போச்சு படத்தோட ப்ரமோஷனுக்கு, ஆனா எனக்கு இது ரொம்ப சர்ப்ரைஸ்னு சொல்றத விட ரொம்ப ஷாக்கிங் தான், என நான் கதையை ரொம்ப மையமாக வைத்து எடுத்த படத்தை இது ஓவர் ஷேடோ பன்னிடுசு, கதையை மறந்துட்டு அந்த பாட்டு தான் ரொம்ப ஃபோக்கஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க ஆடியன்ஸ், நாங்க அவ்வளவு சீரியஸான கன்டென்ட் பண்ண படத்தை பத்தி யாரும் பெருசா பேசல, என்கிட்ட வந்து பேசின எல்லாரும் அந்த பாட்ட பத்தி தான் பேசுனாங்க,

அந்த பாட்டோட ஷேடோப் படத்தையே மறச்சிடுச்சு என்று சொல்லலாம், இப்ப கிடைச்ச வரவேற்பு எனக்கு அப்ப கிடைக்கல ஏன்னா அந்த டைம்ல அந்த படத்துல பாட்டு படத்தை ஓவர் ஷேடோ பண்ணிடுச்சு, இந்த பாட்டு படத்துக்கு ஹெல்ப் பண்ணுச்சுன்னு கேட்டா கேட்டா இல்லன்னு சொல்லுவேன், வேணா நிறைய பேரோட வாழ்க்கைக்கு வேணும்னா ஹெல்ப் பண்ணியிருக்கு நான் நினைக்கிறேன்.தன் உருக்கமான சில விஷயங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசினார்.

author avatar
Ranjith Kumar