லக்னோவின் அர்ஜுன்கஞ்ச் பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியை, தெருவில் திரிந்த பசு மாடு ஒன்று கடுமையாகத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சியில், அப்பகுதிக்குள் மாட்டு மந்தை ஒன்று நுழைவது தெரிகிறது. அதில் ஒரு பசு திடீரென ஆக்ரோஷமடைந்து, அச்சிறுமியை சுவரில் சாய்த்து முட்டி, தரையில் தள்ளி கிட்டத்தட்ட ஒரு நிமிடம் வரை கொடூரமாக மிதித்தது.
https://twitter.com/HateDetectors/status/2083531944093184280/video/1
அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடிவந்து சிறுமியை மீட்டு மருத்துவ சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். அச்சிறுமியின் தற்போதைய உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. நகர்ப்புறங்களில் தெருமாடுகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவது குறித்து இச்சம்பவம் மீண்டும் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
