இவ்வளவு பாசமா?… ஒரே போன் கால்… ஆதிக்கிற்கு அஜித் போட்ட ஆர்டர்… பார்த்திபன் வந்ததுக்கு இதுதான் காரணமா?…!!

By Gayathri on கார்த்திகை 4, 2026

Spread the love

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் திரைப்படத்திற்கு ‘டேர் டெவில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஷாலினி அஜித் குமார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பிரேவ் ஹார்ட்ஸ் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார். சமீபத்தில் சென்னையில் எளிமையான முறையில் படப்பூஜை நடைபெற்ற நிலையில், நவம்பர் 12 முதல் ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முதலில் மூத்த நடிகர் சத்யராஜையே இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சத்யராஜ் மற்றும் அவரது மகள் திவ்யா ஆகியோர் நடிகர் விஜய்யைத் தொடர்ந்து விமர்சித்து வருவதால், தனது நண்பரான விஜய்க்கு ஆதரவாக அஜித் தலையிட்டு சத்யராஜை படத்திலிருந்து நீக்கச் சொன்னதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் உலா வருகின்றன.

   

அஜித் மற்றும் விஜய் இடையே தற்போது மிக நல்ல நட்பு நிலவி வரும் சூழலில், நண்பர் மீதான பாசத்தால் அஜித் இந்த முடிவை எடுத்ததாகவும், இதனால் சத்யராஜுக்குப் பதிலாக அந்த வேடத்தில் நடிகர் பார்த்திபன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் இணையதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.