Connect with us

தமிழ் சினிமாவில் ஆய்வு செய்து டாக்டர் பெற்ற ஒரே நடிகர் இவர்தான்… நடிகர் சார்லி கடந்து வந்த பாதை!

CINEMA

தமிழ் சினிமாவில் ஆய்வு செய்து டாக்டர் பெற்ற ஒரே நடிகர் இவர்தான்… நடிகர் சார்லி கடந்து வந்த பாதை!

 

தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவராக ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து திகழ்பவர் நடிகர் சார்லி.  இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் இவரும் ஒருவர்.

சார்லியின் உண்மையான பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர் என்பதாகும். இந்த பெயர் சினிமாவிற்கு சரியாக வராது என கே பாலசந்தர் சார்லி என்று பெயர் மாற்றிவிட்டார். கல்லூரியில் படிக்கும்போதே மேடை நாடகங்களில் ஆர்வம் கொண்ட சார்லி ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் அந்த துறையில் நடிகராக இயங்கியுள்ளார்.

   

அங்கு அவருக்கு இயக்குனர் பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்துள்ளது. 1983 ஆம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தில் முதல் முதலாக சினிமாவில் நுழைந்தார். தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்த நிலையில் 90 களில் அவருக்கு கல்லூரி மாணவராக பல படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் மூலம் முன்னணி நகைச்சுவை நடிகரானார்.

இதுவரை சார்லி சுமார் 800 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் காதலுக்கு மரியாதை, அமர்க்களம், வெற்றிக் கொடி கட்டு, மாநகரம், கொன்றால் பாவம் உள்ளிட்ட பல படங்கள் இவருக்கு அங்கிகாரத்தைப் பெற்று தந்துள்ளன.

இது மட்டுமில்லை தேர்ந்த இலக்கிய வாசகரான சார்லி தமிழ் சினிமா பற்றி ஒரு ஆய்வையும் மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். நடிகர் சார்லி ’தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ என்ற பெயரில் ஆய்வு செய்து தஞ்சை பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். மிக அரிதாகவே நடிகர்கள் பிஎச்டி பட்டம் பெற்ற ஒரே தமிழ் நடிகர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Continue Reading
To Top