இன்றைய காலகட்டத்தில் இளம் நடிகைகள் தமிழ் சினிமாவில் தங்களுக்கென ஒரு இடத்தை இப்படிக்கு கடுமையாக போராடுகிறார்கள். சிலர் கவர்ச்சியில் இறங்கியும் வாய்ப்பு தேடுகின்றனர். அப்படி இருக்க அந்த காலத்தில் ஒரு துளி கூட கவர்ச்சி இல்லாமல் சினிமாவில் ஜெயித்து காட்டிய நடிகைகள் உள்ளனர். அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். முதலாவதாக நடிகை ரேவதி 1981 ஆம் ஆண்டு ரிலீசான மண்வாசனை படத்தின் மூலம் திரையுலகில் கடந்த பயணத்தை ஆரம்பித்தார்.
இவர் புதுமைப்பெண், வைதேகி காத்திருந்தாள், பகல் நிலவு, மௌன ராகம், புன்னகை மன்னன், கிழக்கு வாசல், தெய்வவாக்கு, பாசமலர்கள் ரத்னா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக நடிகை நதியா கடந்த 1985 ஆம் ஆண்டு ரிலீசான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். நதியா கவர்ச்சி காட்டாமல் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். நதியா வளையல், நதியா புடவை, நதியா பெண்கள் சைக்கிள் என சொல்லும் அளவிற்கு அந்த காலத்தில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கினார்.
நடிகை ரேகா கடந்த 1986 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன கடலோரக் கவிதைகள் படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு புன்னகை மன்னன், செண்பகமே செண்பகமே, பாட்டுக்கு நான் அடிமை. நினைவே ஒரு சங்கீதம், குணா, அண்ணாமலை, ரோஜா கூட்டம், தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சுஹாசினி தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் என் புருஷன் எனக்கு மட்டும்தான், சிந்து பைரவி, தாய் வீடு, ஆகாயகங்கை பாலைவன சோலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஊர்வசி முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். ஊர்வசியின் எதார்த்தமான நடிப்பிற்கும் குடும்பப்பாங்கான முகம் பாவனைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் காதலுக்கு மரியாதை என்ற படத்தில் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஒரு துளி கூட கவர்ச்சி இல்லாமல் தங்களது நடிப்பால் இவர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.