Connect with us

இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யாருன்னு தெரியுதா..? கண்டுபிடிங்க..!

CINEMA

இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யாருன்னு தெரியுதா..? கண்டுபிடிங்க..!

 

பிரபல இயக்குனரான அகஸ்தியன் அவர்களின் இரண்டாவது மகள் நடிகை விஜயலட்சுமியின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணைத்து வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரா இவர் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் பிரபல இயக்குனராக இருந்தவர் அகஸ்தியன்.

   

பல முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை எல்லாம் இயங்கி இருக்கின்றார். நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த காதல் கோட்டை திரைப்படத்தை இயக்கியவர் இவர்தான்.  இவருக்கு மொத்தம் மூன்று மகள். கனி, விஜயலட்சுமி, நிரஞ்சனா. இவரது இரண்டாவது மகள் விஜயலட்சுமி. வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையானார்.

அதைத் தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். வனயுத்தம் என்ற திரைப்படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவியாக நடித்து அசத்தியிருந்தார். அதைத்தொடர்ந்து இவர் சென்னை 600028 பாகம் இரண்டிலும் நடித்திருந்தார். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்த இவர் அவசரப்பட்டு படங்களை தேர்வு செய்ய மாட்டேன் எனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறியிருந்தார்.

சில காலமாகவே படங்களில் எதுவும் நடிக்கவில்லை அதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒயில் கார்டு என்ரியாக சென்றிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும் அதை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல் பரிசை வென்று அசத்தியிருந்தார்.

இவர் பெரோஸ் என்கின்ற இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொண்டு செட்டிலான இவர் சமூகவலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். விதவிதமாக உடை அணிந்து அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு வருவார். மேலும் தனது மகன்கள் மற்றும் தங்கையுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிடுவார். இவரின் சிறு மீது புகைப்படம் ஒன்றை தற்போது இணையதில் வெளியாகி இருக்கின்றது. இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அவரா இவர் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top