‘பிக் பாஸ்’ போட்டியாளர் வனிதாவிற்கு இவ்வளோ  பெரிய மகள் உள்ளாரா?… வைரலாகும் புகைப்படம்…

By Samrin

Updated on:

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா.

   

இவர் பெற்றோர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா. 1996 ஆம் ஆண்டு வெளியான ‘மாணிக்கம்’ என்ற படத்தில் சாவித்திரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து  தேவி ,ஹிட்லர் ,நான் ராஜாவாகப் போகிறேன் போன்ற படங்களில்  நடித்துள்ளார்.

நடிகை வனிதா ஆகாஷ் என்பவரை 2000ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிறகு இவர்களின் மன வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றனர்.

சிறிது காலத்திற்கு பிறகு  ராஜன் ஆனந்த் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மூன்று வருடங்கள் மட்டும்  இந்த திருமண வாழ்க்கை நீடித்தது அதன் பிறகு மன கசப்பின் காரணமாக விவாகரத்து பெற்றனர்.

1999 ஆம் ஆண்டு  வெளியான ‘காக்கைச் சிறகினிலே’  என்ற படத்திற்கு உதவி இயக்குனராக    பணியாற்றினார்.

இவர் ‘எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ என்ற படத்தை தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மன வருத்தத்தின் காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர்.

வனிதாவுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ,ஜோவிகா,ஜெயந்திகா, என்ற  மகளும்   உள்ளனர் .

நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரை ரீ  என்ட்ரி  கொடுத்துள்ளார் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ சீசன் 1 கலந்து கொண்டார்.

அந்த சீசன்  வெற்றியாளர்  தேர்ந்தெடுக்கப்பட்டார். வனிதா விஜயகுமார். இவர் ‘பிக் பாஸ்’ சீசன் 3 பங்கேற்று ரசிகரின் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு இவர் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

அதன் பிறகு தனியாக ஒரு youtube சேனல் ஆரம்பித்து அதில் பேஷன் டிசைனிங் மேக்கப் ஆர்ட்டிஸ்ட், சமையல் என பன்முக திறமைகளை வெளிகாட்டி  வருகிறார்.

இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவரின் மகள்களின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.