‘இப்படித்தான் இருக்கணும் என்னோட பாய் ஃப்ரெண்ட்’.. ஷாப்பிங்கில் கண்டிஷன் போட்ட ராஜா ராணி 2 சீரியல் நடிகை.. படுவைரல் வீடியோ..

By Begam

Updated on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. ராஜா ராணி சீரியல் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இந்த இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் நடிகை ஆலியா மானசாவும் சஞ்சீவும் இணைந்து நடித்து அசத்தியிருந்தனர்.

   

இதை தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் நடிகை ஆலியாவே சந்தியா கதாபாத்திரத்தில்  நடித்துக் கொண்டு வந்திருந்தார். பிரசவத்தின் காரணமாக சீரியலை விட்டு விலகிய இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த ராஜா ராணி சீரியல் ஏகப்பட்ட கதாபாத்திர மாற்றங்கள் நடந்துள்ளது.

தற்பொழுது இந்த சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வைஷு சுந்தர். இவர் டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர். தற்பொழுது இவர் ராஜாராணி 2 சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள பொன்னி என்ற புதிய சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்..

இந்த சீரியல் வரும் மார்ச் 27ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திரைபிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக டி நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு அதிகமாக ஷாப்பிங் செய்ய படையெடுத்து வருகின்றனர். அந்த லிஸ்டில் தற்பொழுது வைஷு சுந்தரும் இணைந்துள்ளார்.

தற்பொழுது அவர் பார்வதி என்ற கதாபாத்திரத்திற்கும், பொன்னி என்ற கதாபாத்திரத்திற்கும் தேவையான ஆடைகளை வாங்கி குவித்துள்ளார். மேலும் இந்த ஷாப்பிங்கில் ‘உங்கள் பாய் பிரண்ட் எப்படி இருக்கணும்? என கேட்டதற்கு ‘சாக்லேட் பாயாகவும் இருக்கணும். ராக்கெட் பாயாகவும் இருக்கணும்’  என்று கூறியுள்ளார். தற்பொழுது இவரின் ஷாப்பிங் வீடியோ இணையத்தில் படு வைரலாகி விடுகிறது. இதோ அந்த வீடியோ….