தமிழ் சினிமாவில் அழகு தேவதையாக வலம் வரும் தமன்னா கடந்த 2006-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன கேடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா, சுறா, சிறுத்தை, வேங்கை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சூர்யா, அஜித், விஜய் சேதுபதி உள்ளிட்டோருடன் இணைந்து தமன்னா நடித்துள்ளார். ஜெய்லர் திரைப்படத்தில் தமன்னா காவலா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரை இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். கடைசியாக சுந்தர் சியின் அரண்மனை 4 படத்தில் தமன்னா நடித்துள்ளார்.
இப்போது ஹிந்தி படங்களில் தமன்னா நடித்து வருகிறார். பிரபல பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலிக்கிறார். ஒரு சில படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் வைத்து நடைபெற்றது. இதில் பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அந்த வரவேற்பு விழாவில் தமன்னாவும் கலந்து கொண்டார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அவ்வபோது கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தமன்னா வெளியிட்ட ஃபோட்டோஸ் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.