‘சுப்ரமணியபுரம்’ பட  நடிகை சுவாதியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… வைரலாகும் புகைப்படம்…

By Samrin

Updated on:

தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான நடிகை தான் சுவாதி ரெட்டி. இவர் ஏப்ரல் 19ஆம் தேதி 1987 பிறந்தார்.

   

இவர் பெற்றோர் தந்தை சிவராமகிருஷ்ணன் ரெட்டி ,தாய் இந்திராதேவி. சசிகுமார் இயக்கத்தில் வெளியான ‘சுப்ரமணியபுரம்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன்,  போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் திரைப்பட நடிகை மட்டுமல்ல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ,பின்னணி பாடகி ,என பன்முக திறமைகளை கொண்டவர்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் , என பலமொழி படங்களில் நடித்துள்ளார். அதன் பின் இவருக்கு  சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் படங்களில்  நடிப்பதை  நிறுத்திவிட்டார்.

நடிகை சுவாதி இந்தோனேசியாவைச் சார்ந்த விகாஸ் என்பவரை  2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.விகாஸ் ஏர்லைன்ஸ்ஸில் பணிபுரிந்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு இவர் ஒரே மலையாளத்தில் மட்டும் நடித்தார். அதன் பிறகு தன் குடும்பத்தை கவனித்து வந்தார்.

நீண்ட கால  இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு படத்தின் மூலமாக ரீ  என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை சுவாதி.

 

தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது.