‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதாவின் மகனா இது?… இவ்வளவு பெருசா வளந்துட்டாரே… லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதாவின் மகனா இது?… இவ்வளவு பெருசா வளந்துட்டாரே… லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியல் தற்பொழுது பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாக்கிக் கொண்டுள்ளது. கூட்டு குடும்பம், குடும்ப ஒற்றுமை, குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்கள், விட்டுக் கொடுத்தல் என பல விஷயங்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காட்டி வருகிறது.

இல்லத்தரசிகளின் மிக விருப்பமான சீரியல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.  தற்பொழுது இந்த சீரியலில் மீனாவின் தங்கையின் திருமணம் நடைபெறவுள்ளது. இதிலும் பல பிரச்சனைகளும், சண்டைகளும் காத்திருக்கின்றன. இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் வருபவர் நடிகை சுஜிதா. இவர் தனம் என்ற கதாபாத்திரத்தில் தனது நடிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார்.

நல்ல அண்ணியாக, ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து தனது குடும்பத்தை கவனித்து வருகிறார் தனம். இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபலமான நடிகை ஆவார். சிறுவயதிலிருந்தே வெள்ளித்திரையில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை சுஜிதா. இவர் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சுஜிதா தனது மகனுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை  பார்த்த ரசிகர்கள் நடிகை சுஜிதாவின் மகனா இது? என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam