CINEMA
புது வீட்டில் குடியேறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா…. வைரலாகும் கிரகப்பிரவேச புகைப்படங்கள்…
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது சீரியல் நடிகையாக வலம் வருபவர் தான் சுஜிதா தனுஷ்.
தற்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சுஜிதா தனுஷ்.
இந்த சீரியல் மூலம் மக்களின் மனதை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
சின்னத்திரையில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தென்னிந்திய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கினார்.
வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் சீரியல் அல்லது சினிமா என்ற ஒரு நிலை வந்த போது சுஜிதா சீரியலை தேர்வு செய்தார்.
இவர் பல சீரியல்களிலும் நடித்துள்ள நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தி வருகிறார்.
அது மட்டுமல்லாமல் கதை கேளு கதை கேளு என்ற பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார்.
40 வயதாகும் சுஜிதா இன்னும் அதே இளமையுடனும் பொலிவுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்.
தன்னுடைய இளமையின் ரகசியம் குறித்தும் அண்மையில் அவர் பகிர்ந்து கொண்டார்.
நடிப்பது மட்டுமின்றி அவர் பல நடிகைகளுக்கு மலையாளத்தில் டப்பிங் கூட பேசி வருகிறார்.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
இந்த நிலையில் சுஜிதா தற்போது புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். அதன் கிரகப்பிரவேசம் நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில் கணவர் மற்றும் மகனுடன் புது வீட்டில் குடியேறினார்.
இவரின் கிரகப்பிரவேச விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டே இவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.