37 வயதில் தனது காதலரை கரம் பிடித்த ரஜினி பட நடிகை.. வைரலாகும் திருமணம் புகைப்படங்கள்..!!

By admin on ஆனி 23, 2024

Spread the love

பாலிவுட்டில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. தமிழில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில்  சோனாக்ஷி சின்ஹா ஹீரோயினாக நடித்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாக ஜாஹீர் இக்பால் என்பவரும் சோனாக்ஷயும் காதலித்து வந்தனர். இவரும் பிரபல நடிகர் ஆவார்.

PHOTOS: சூப்பர் ஸ்டாரின் லிங்கா பட நடிகையா இது? வெயிட் குறைச்சு ஆளே  மாறிட்டாங்களே.. யாருன்னு பாருங்க! | Cinema: Super Star Rajini Movie Actress  Sonakshi Sinha Latest Photos ...

   

கடந்த 2022-ஆம் ஆண்டில் டபுள் எக்ஸ் எல் திரைப்படத்தில் சோனாக்ஷி சின்ஹாவும் ஜாஹீரும் இணைந்து நடித்தனர். பட விழாக்கள் பொது நிகழ்வுகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். இதில் சோனாக்ஷி சின்ஹாவுக்கு 37 வயது ஆகிறது. ஜாஹிருக்கு 35 வயது ஆகிறது. இவர்களது காதலுக்கு சோனாக்ஷி சினேகாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

   

 

இந்த நிலையில் இன்று சோனாக்ஷி சின்ஹா தனது நீண்ட நாள் காதலர் ஜாஹிர் இக்பாலை திருமணம் செய்துள்ளார். கடந்த 20-ஆம் தேதி இருவருக்கும் ஹல்தி நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற ஹல்தி நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள்,  நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று மாலை சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாஹீருக்கு நெருங்கி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.