தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் நடிகை சோனா. இவர் பெயருக்கு பின்னால் பல ஹீரோக்களின் பெயர்களும் சேர்ந்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். காமெடி நடிகர்களில் இருந்து முன்னணி நடிகர்களின் பெயர்களும் அடிப்படும். அஜித் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர்தான் சோனா. அதன் பிறகு இவருக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் அனைத்தும் கவர்ச்சியான நடிகை கதாபாத்திரம் தான்.
தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக படங்களில் அவரை வெளிப்படுத்தி கிட்டத்தட்ட ஒரு கிளாமர் நடிகையாகவே மாறிவிட்டார். அப்போது அது பெரிய வருத்தமாக தெரியவில்லை என்றாலும் நாட்கள் கடந்தாலும் நல்ல கதாபாத்திரம் கேட்டாலும் இல்லை மேடம் இது உங்களுக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கு நடிக்கிறீர்களா என்று இயக்குனர்களே முடிவு செய்வதாக வேதனையுடன் அவர் பலமுறை தெரிவித்துள்ளார். இப்படியான நிலையில் நடிகை சோனா சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் சிம்பு பற்றி பேசியுள்ளார்.
அதில், சிம்பு என்னோட டார்லிங். உண்மையிலேயே அவர் என்னோட டார்லிங் என்றுதான். அதையும் தாண்டி ஒரு பலியாடு என்று சொல்லலாம். ஆரம்பத்தில் அவருடைய வயதுக்கு அந்த மாதிரி சர்ச்சைகள் நிறைய வந்தது. ஆனால் எல்லோருமே அந்த வயதில் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் சிம்பு எனும்போது சிம்பு சிம்பு என அவருடைய பெயரை மட்டும் தான் பதிவிட்டு செய்திகள் வரும். மறுநாள் காலையில் பத்திரிக்கையில் என்னுடைய புகைப்படம் மட்டும் பெரிய அளவில் போட்டு மட்டையாக கிடந்தார் என்று ஒரு செய்தி வரும்.
கேட்டால் நான் ஒரு பலியாடு. பெரிய பெரிய நடிகைகள் எல்லாம் அதிகமா குடித்துவிட்டு மட்டையாகிக் கிடப்பார்கள். நான் சும்மா உட்கார்ந்து கொண்டுதான் இருப்பேன். ஆனால் என்னுடைய புகைப்படத்தை பத்திரிகைகளில் போடுவார்கள். இப்படித்தான் சிம்புவையும் பலியாடாக மாற்றி விட்டார்கள். ஆனால் சிம்பு உண்மையிலேயே ஒரு வைரம். அவர் கடைசி வரை நன்றாக இருக்க வேண்டும் என கடவுளிடம் நான் வேண்டிக் கொள்கிறேன் என நடிகை சோனா பேசியுள்ளார்