குறுகிய காலம் மட்டுமே சினிமாவில் பயணித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் சிவரஞ்சனி. 90 காலகட்டத்தில் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்த இவருடைய உண்மையான பெயர் உமா மகேஸ்வரி. சினிமாவிற்காக சிவரஞ்சனி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். இவர் 1990 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் மிஸ்டர் கார்த்திக் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவரை தமிழ் ரசிகர்கள் கண்ணழகி என்று புகழ்ந்தனர்.
அதன் பிறகு கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமான சிவரஞ்சனி இறுதியாக 1997 ஆம் ஆண்டு தமிழில் வெளியான துர்க்கை அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் மொத்தமாக சினிமாவை விட்டு விலகி விட்டார். சினிமாவை விட்டு விலகிய இவர் பிரபல தெலுங்கு நடிகர் மீகா ஸ்ரீகாந்த் அவர்களை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். நடிகர் ஸ்ரீகாந்த் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் ஆவார். இவர் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தில் விஜயின் மூத்த அண்ணனாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் சிவரஞ்சனி சமீபத்தில் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, என் வாழ்க்கையில் நான் செய்த ஒரு நல்ல விஷயம் என்றால் அது என்னுடைய கணவரை திருமணம் செய்து கொண்டது தான். அவர் என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகு தான் என்னுடைய வாழ்க்கை அப்படியே மாறியது. நான் 21 வயதில் திருமணம் செய்து கொண்டேன். அந்த நேரத்தில் புகழில் உச்சத்தில் இருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். நான் நடித்த பல படங்கள் ஹிட் அடித்தது.
அதனால் ஏன் இப்போது திருமணம் செய்ய போகிறீர்கள் என்று பலரும் கேட்டார்கள். நான் இதுதான் எனக்கு சரியான நேரம் என்று சொன்னேன். அவரை திருமணம் செய்து கொண்டதால் இப்போ வரைக்கும் என்னுடைய திருமண வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். ஒருவேளை அவரை திருமணம் செய்யாமல் போயிருந்தால் என் வாழ்க்கை எப்படி மாறி இருக்கும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று சிவரஞ்சனி கூறியுள்ளார்.