80’ஸ் கனவுக்கன்னி சில்க் ஸ்மிதா ஆடி பாத்துருப்பீங்க…! பாடி பாத்துருக்கீங்களா…? இதுவரை நீங்கள் பார்த்திடாத unseen வீடியோ…

By Begam on அக்டோபர் 20, 2023

Spread the love

தென்னிந்திய திரை உலகின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ‘சில்க் ஸ்மிதா’ இவர் இயக்குனர் வினு சக்கரவர்த்தி இயக்கிய’ வண்டிச்சக்கரம்’ எனும் திரைப்படத்தில் ‘சிலுக்கு’ என்கிற சாராயக்கடையில் பணிபுரியும் பெண்  கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.இத்திரைப்படத்திற்கு பிறகு தான் ‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்பட்டார். தனது கவர்ச்சியான தோற்றத்தாலும், நடனத்தாலும் அனைவரையும் ஈர்த்தார்.

   

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம் கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் நடித்து திரைப்பட உலகின் கனவு கன்னியாக வலம் வந்தார்.  மூன்று முகம் , சகலகலா வல்லவன் ,அலைகள் ஓய்வதில்லை, நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேட்குமா, மூன்றாம் பிறை போன்றவை இவர் நடிப்பில் வெளியான சில ஹிட் படங்கள். குறுகிய காலத்துக்குள் அதிக படங்களில் நடித்த இவர் தனது  35 வது வயதில் தூக்கு போட்டு தன்னுடைய வீட்டிலேயே இறந்தார்.

   

 

காதல் தோல்வி இவர் இறப்பிற்கு காரணமாக சொல்லப்படுகிறது. சில்க் ஸ்மிதாவின் நடன திறமையும் கண்களின் வசீகரமும் திரைப்பட உலகில் ஒரு அழியாத சுவட்டை விட்டு சென்றுள்ளது என்பதை யாராலும் மறக்க முடியாது.  இப்படி திரையுலகில் ஒரு கலக்கு கலக்கிய இவரின் மரணம் தற்பொழுது வரை அவருடைய ரசிகர்களின் மனதில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நடிகை சில்க் ஸ்மிதாவின் நடிப்பு, நடனம்  இரண்டையும் நாம்  பார்த்திருப்போம். அனால் அவர் பாடி நாம் பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. தற்பொழுது அவர் துபாயில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாட்டு பாடி அசத்திய பழைய unseen வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

https://www.youtube.com/watch?v=-favARX3O24