80ஸ் முன்னணி நடிகை சரிதாவின் மகன்களை பார்த்திருக்கீங்களா?… அதில் ஒருவர் டாக்டரா?… புகைப்படங்கள் உள்ளே…

By Begam

Published on:

தமிழ் திரையுலகில் 1980 to 1990 ஆம் ஆண்டுகளில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் நடிகை சரிதா. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என கிட்டத்தட்ட பல மொழிகளில் 160 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

   

நடிகை சரிதா கதாநாயகியாக மட்டுமல்லாமல், முன்னணி நடிகைகளான நக்மா, விஜயசாந்தி, தபு, சுஷ்மிதா சென், ரம்யா கிருஷ்ணன் போன்ற பல நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

இவர் முக்கியமாக இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து  அசத்தியுள்ளார்.

நடிகை சரிதா 1978ல் மரோரா சரித்ரா என்ற தெலுங்கு படத்தில் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார்.

இவரது நடிப்பில் வெளிவந்த தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுக்கவிதை போன்ற திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

தற்பொழுது நடிகை சரிதா சில வருட இடைவெளிக்கு பின்னர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதேபோன்று தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நடிகை சரிதா.நடிகை சரிதா அவர்களின் குடும்ப வாழ்க்கையை பற்றி பார்க்கும் பொழுது அவர்களுக்கு இரண்டு திருமணங்கள்நடந்தது. ஆனால் இரண்டுமே விவாகரத்தில் தான் முடிந்துள்ளது.

நடிகர் சரிதா மலையாள நடிகர் முகேஷ் என்பவரை 1988ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஸ்ரவன், தேஜாஸ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதில் ஸ்ரவன் என்பவர் மருத்துவராக ஐக்கிய அரபு நாட்டில் பணிபுரிந்து வருகிறார். நடிகை சரிதாவும் அவருடன் வசித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது நடிகை சரிதாவின் மகன் ஸ்ரவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மா மற்றும் சகோதரனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது படுவைரலாகி வருகிறது.