நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் வெளியீடு தள்ளிப்போகும் சூழலில், நடிகை சனம் ஷெட்டி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “படதிற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்காமல் பட ரிலீஸை தள்ளிப்போடுவது அநியாயத்தின் உச்சக்கட்டம். பொங்கல் அன்னைக்கு வரலனா என்ன? படம் வந்த நாள் தான் நமக்கு பொங்கல்.. நீ வா தல நாங்க இருக்கோம்..” என்று குறிப்பிட்டுத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
“படம் வெளியாகுற நாள்தான் பொங்கல்”.. நீ வா தல..
நாங்க இருக்கோம்..!!#SanamShetty #JanaNayaganCensor pic.twitter.com/s6qDDQjOqJ— Makkal thalapathy appu (@MakkalAppu90801) January 8, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், தணிக்கைச் சான்றிதழ் தாமதமானதால் படத்தின் வெளியீடு குறித்து மர்மம் நிலவுகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தணிக்கை வாரியத்தின் (CBFC) பதிவுகளைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. இறுதித் தீர்ப்பு ஜனவரி 9, 2026 காலை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சனம் ஷெட்டி மட்டுமல்லாது, பல திரை பிரபலங்களும் ரசிகர்களும் “படம் வெளியாகும் நாள் தான் எங்களுக்குப் பொங்கல்” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் #JanaNayagan ஹேஷ்டேக் மூலம் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
