நடிகை ரோஜாவின் மகளா இவர்?… அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாங்களே… லேட்டஸ்ட் கியூட்  புகைப்படங்கள் உள்ளே…

By Begam

Published on:

90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர்.

   

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘செம்பருத்தி’ படம் மூலம் அறிமுகமானார் ரோஜா.

இயக்குனர் ஆர்கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் சில ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இவர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக தீவிர அரசியலில் தற்போது ஈடுபட்டு வருகிறார். ஆந்திர மாநிலம் நகரி  தொகுதியின் எம்எல்ஏவாகவும், மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகவும் தற்போது பதவி வகித்து வருகிறார்.

ஒருபுறம் நடிகையாகவும் மறுபுறம் அரசியல் பிரபலமாகவும் கலக்கிக் கொண்டுள்ளார் நடிகை ரோஜா.

இவரின் மகளின் பெயர் அன்ஷுமாலிகா. இவர் தற்பொழுது திரைப்படத்தின் நடிகையாக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை ரோஜாவின் மகள் தற்பொழுது அமெரிக்காவில் உள்ள பிரபல திரைப்பட கல்லூரியில் நடிப்பு, இயக்கம், திரைக்கதை எழுதுதல் ஆகியவை பற்றி படித்துக் கொண்டு வருகிறார்.

படிப்பை முடித்ததும் இந்தியா திரும்பி நடிப்பில் கவனம் செலுத்துவார் என கூறப்படுகின்றது.

அதோடு மட்டுமில்லாமல் நடிகை ரோஜாவும், அவரது கணவருமே மகளுக்கு வேண்டிய அனைத்து பயிற்சிகளையும் கொடுத்து விடுவர்.

நடிகை ரோஜாவின் மகள் மட்டும் ஹீரோயினாக களமிறங்கினால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தற்பொழுது நடிகை ரோஜா மகளின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் படு வைரலாக்கப்பட்டு வருகிறது.

  இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை ரோஜாவின் மகளா இது? ஹீரோயின் போல இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.