சேலையில் ரசிகர்களை கட்டி இழுக்கும் நடிகை ரேஷ்மா.. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்..!!

By Priya Ram on ஜூன் 20, 2024

Spread the love

பிரபல நடிகையான ரேஷ்மா பசுபுலெட்டி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 201- ஆம் ஆண்டு தமிழில் ரிலீசான மசாலா படம் திரைப்படம் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முன்னதாக தெலுங்கு  திரையுலகில் ஒரு சில சீரியல்களில் ரேஷ்மா நடித்துள்ளார்.

   

பிரபல சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலிலும் ரேஷ்மா பசுபுலெட்டி  நடித்தார். வாணி ராணி சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  ரேஷ்மா பசுபுலெட்டி  தமிழ்  மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வேலை பார்த்துள்ளார். கடந்த ஆண்டு பிரேம்ஜியின் சத்திய சோதனை திரைப்படத்தில் ரேஷ்மா பசுபுலெட்டி  நடித்துள்ளார்.

   

 

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா பசுபுலெட்டி  முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  விஷ்ணு விஷால் நடிப்பில் ரிலீசான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் சூரியின் மனைவியாக நடித்தார்.

ரேஷ்மா பசுபுலெட்டியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் சினிமா மற்றும் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மாவுக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது சேலை அணிந்து ரேஷ்மா வெளியிட்ட புகைப்படங்களும் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.