நடிகை ராஷ்மிகா மந்தனா அம்மா, அப்பா, தங்கையை பாத்துருக்கீங்களா…வைரலாகும் குடும்ப புகைப்படம் இதோ…

By Begam

Published on:

நடிகை ராஷ்மிகா மந்தனா அப்பா, அம்மா தன்னுடைய தங்கை என குடும்பமாக எடுத்துக் கொண்ட புகைப்படம்  தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கார்த்தியின் ’சுல்தான்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்த ராஷ்மிகா, வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் ‘வாரிசு’ திரைப்படத்தில் இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். எக்ஸ்பிரஷன் குயினாக வலம் வரும் ராஷ்மிகா ‘நேஷனல் க்ரஷ்’ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

   

இந்தியில் அவர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ’மிஷன் மஜ்னு’, அமிதாப் பச்சனுடன் ’குட்பை’, ரன்பிர் கபூருடன் ’அனிமல்’ ,இளைய தளபதியுடன் ‘வாரிசு ‘போன்ற  படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே ’புஷ்பா 2’ திரைப்படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இவர் தற்பொழுது அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடித்த ‘குட் பை ‘படத்தின் ப்ரமோஷன் பணிகளில்ஈடுபட்டு வரும் அவர் தன்னுடைய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு அதில் , இது என்னுடைய ரியல் பேமிலி, விரைவில் ‘குட் பை’பேமிலி உடன் உங்களை நான் சந்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ‘குட் பை’படத்தை குடும்பத்துடன் சென்று பாருங்கள் என்றும் கூறியுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…