90களில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பிசியான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்பா. இவருடைய பல படங்கள் முன்னாடி ஹீரோக்களுடன் அமைந்தது. விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல வெற்றி படங்களை கொடுத்த இவர் கவர்ச்சியுடன் நடிப்பையும் மிக்ஸ் செய்து கொடுத்தவர். அதிலும் குறிப்பாக இவருடைய தொடையழகு ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டது. உள்ளத்தை அள்ளித்தா படத்தில் இவருடைய என்ட்ரி மிக சிறப்பாக அமைந்தது. தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய ரம்பா அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடித்தார்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ள நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு இவர் நடிப்பில் ஈடுபடவில்லை. திருமணம் ஆகி குடும்பம் மற்றும் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார். தன்னுடைய கணவரின் பிசினஸில் உறுதுணையாக இருந்து வருகின்றார். சமீபத்தில் நல்ல கதை அமைந்தால் மீண்டும் தமிழில் நடிப்பேன் என ரம்பா தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் ரம்பா மீண்டும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்குப் பிள்ளையார் சுழி போடும் வகையில் விஜய் டிவியின் டான்ஸ் நிகழ்ச்சியில் அவர் இணைய உள்ளார்.
அதாவது விஜய் டிவியின் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சி அடுத்தடுத்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இதன் அடுத்த சீசன் விரைவில் தொடங்க உள்ளதால் இந்த நிகழ்ச்சியில் ரம்பா நடுவராக இணைய உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சீசனில் சாண்டி மாஸ்டர், ஸ்ரீதேவி மற்றும் மீனா ஆகியோர் நடுவர்களாக இருந்த நிலையில் தற்போது தொடங்க உள்ள புதிய சீசனில் மீனாவிற்கு பதில் நடுவராக வர உள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.