இந்த புகைப்படத்தில் வெளிநாட்டுப் பெண் போன்ற லுக்கில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?… தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க… 

இந்த புகைப்படத்தில் வெளிநாட்டுப் பெண் போன்ற லுக்கில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?… தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க… 

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா. இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். 80 மற்றும் 90களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தனது சிறந்த நடிப்புக்காக ஃபிலிம் பார் மற்றும் தமிழகத்தின் மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.

வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சின்னத்திரையிலும் கால் பதித்தார். சித்தி, செல்வி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி ,சித்தி 2 என பல பிரபல சீரியல்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்தார். பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள்தான் நடிகை ராதிகா என்பதை நாம் அறிவோம்.

வாரிசு நடிகையாக இவர் திரையுலகில் நுழைந்து இருந்தாலும், தனது திறமையின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவருடைய நடிப்பில் லவ் டுடே, பட்டத்து அரசன், ரன் பேபி ரன் போன்ற படங்கள் சமீபத்தில் வந்திருந்தன. தற்போது இவர் வெள்ளித்திரையில் அதிகம் கவனம் செலுத்துவதால் அவர் சின்னத்திரையில் தயாரிப்பாளராக மட்டுமே இருந்து வருகிறார்.

நடிகை ராதிகா 2001ல் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது வரை இவர்கள் நட்சத்திர தம்பதிகளாக திரையுலகில் வலம் வந்து கொண்டுள்ளனர். தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சிக்காக ஒரு புதிய சீரியல் ஒன்றை தயாரிக்க உள்ளார். ‘கிழக்கு வாசல்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த சீரியலில் சஞ்சீவி வெங்கட் மற்றும் ரேஷ்மா முதன் முறையாக ஜோடியாக சேர்ந்து நடிக்க உள்ளனர்.

அத்துடன் நடிகர் விஜயின் அப்பா எஸ் ஏ சி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை ராதிகா தனது இளம் வயதில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு அப்படியே வெளிநாட்டு பெண் போன்று உள்ளார்நடிகை ராதிகா. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை ராதிகாவா இது?’ என ஆச்சரியத்தில் கமண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரின் புகைப்படம்….

Begam