கல்யாணம் செஞ்சுக்க வயசு மட்டும் போதாது… இந்த விஷயங்களும் தெரிஞ்சிருக்கணும் – நடிகை பிரகதி சொன்ன அட்வைஸ்!

By Elango on மார்கழி 27, 2025

Spread the love

தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களின் நடித்தவர் நடிகை பிரகதி. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் கூறியதாவது, திருமணம் செய்து கொள்ள வயது ஒரு பொருட்டல்ல. வயது மட்டும் இருந்தால் போதாது. திருமணம் செய்து கொள்ள நிறைய முதிர்ச்சி இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் நம்பிக்கை மற்றும் புரிதல் இருக்க வேண்டும். திருமண விஷயத்தில் இந்த மூன்றும் மிக முக்கியம். மரியாதையும் நம்பிக்கையும் இல்லாத இடத்தில் எந்த உறவும் நிலைக்காது.

உறவு நீடிக்க ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பது முக்கியம். ஒருவரின் எண்ணங்களை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும். இருவரிடமும் அந்த குணம் இருப்பதே மிகவும் முக்கியம் என்று பிரகதி கூறியிருக்கிறார். திருமணம் குறித்த அவரது இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் துருக்கியில் நடந்த ஆசிய ஓபன் மற்றும் மாஸ்டர் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகை பிரகதி 4 பதக்கங்களை வென்றார். ஏனெனில் இவர் ஒரு பளு தூக்கும் வீராங்கனை என்பது ரசிகர்கள் பலரும் அறியாத தகவலாகும்.