தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் பூஜா ராமச்சந்திரன்.
தொகுப்பாளினியாக இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் துணை நடிகை அறிமுகமானார்.
இவர் காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2 மற்றும் நண்பேண்டா உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.
இவர் முதலில் கிரெக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில பிரச்சனைகளால் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.
அதன் பிறகு சார் பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த மலையாள நடிகர் ஜான் கொக்கைனை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இந்த காதல் தம்பதி அடிக்கடி ஜாலியாக ஊர் சுற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் பூஜா ராமச்சந்திரன், கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கியான் கொக்கென் என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் பூஜா ராமச்சந்திரன் தனது கணவருடன் குழந்தையை முதன் முதலாக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற பீட்சா சாப்பிட்டுள்ளார்.
அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து எங்கள் உடனான முதல் பீட்சா டேட் மதிய உணவு. கியான் எங்களுடன் சேர்ந்து நமக்கு பிடித்ததை சாப்பிட தொடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறி அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.