Connect with us

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுதா..? 40 வருடங்களுக்கு மேலாக சினிமா & சீரியலில் கலக்கி வரும் நடிகை..

CINEMA

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுதா..? 40 வருடங்களுக்கு மேலாக சினிமா & சீரியலில் கலக்கி வரும் நடிகை..

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவருக்கு ஒரு அக்காவும் இருக்கிறார். அவரின் பெயர் பிரியதர்ஷினி அவரும் சின்னத்திரையில் மிக பிரபலமானவர். தொலைக்காட்சி தொகுப்பாளினியாக  பிரியதர்ஷினி,சன், ஜீ ,விஜய் ,கலைஞர் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் 1000 கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

   

மேலும் கலைஞர் டி வி யில் ஒளிப்பாரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசையும் வென்றார். தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த இவர், முதன்முதலில் திரையுலகில் இயக்குனர் பாக்யராஜ் நடிப்பில் 1984 இல் வெளியான ‘தாவனிக்கணவுகள்’ என்ற படத்தில் அவரின் கடைசி தங்கையாகவும் நடித்து கால் பதித்தார்.

   

 

இதைத்தொடர்ந்து எண்ணற்ற திரைப்படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் தற்பொழுது வரை  வருகிறார். மேலும் அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் மிகவும் மிகவும் முக்கியமான ‘ரேணுகா’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை பிரியதர்ஷினி ரமணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரிஷி என்ற மகனும் உள்ளார்.  சிறுவயது முதலே பரதநாட்டியத்தில் ஈடுபாடு கொண்ட இவர், சிறப்பாக பரதநாட்டியமும் ஆட கூடியவர். தற்பொழுது அவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

More in CINEMA

To Top