நடிகை பார்வதி நாயர் கவர்ச்சியான உடையில் போட்டோ சூட் எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார்.
மலையாள சினிமா மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமான நடிகை பார்வதி நாயர் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார்.
அதனை தொடர்ந்து உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் மீண்டும் மலையாள சினிமாவிற்கு சென்று நடித்து வருகிறார்.
தற்போது மலையாளம் மற்றும் கன்னட சினிமாவில் கவனம் செலுத்தி வரும் பார்வதி நாயர் அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.