தனது உயிர் மற்றும் உலகத்துடன் இணைந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய நடிகை நயன்தாரா!… வைரலாகும் அழகான வீடியோ இதோ!….

தனது உயிர் மற்றும் உலகத்துடன் இணைந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய நடிகை நயன்தாரா!… வைரலாகும் அழகான வீடியோ இதோ!….

நடிகை நயன்தாரா தனது கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று தனது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த முன்னணி நடிகையாக தற்போது உயர்ந்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான  ‘கனெக்ட்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தான்  அப்பா ஆகிவிட்டதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இணையத்தில் வெளியிட்ட பதிவு திரையுலகையையே திரும்பிப் பார்க்க வைத்தது.

இதை தொடர்ந்து அவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டனர் என்று அறிவித்தனர். இதை தொடர்ந்து பல பிரச்சினைகளும் பல விமர்சனங்களையும் சந்தித்தனர். ஆனால் சில நாட்களிலேயே இவர்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என இரண்டு பண்டிகைகளுக்கும்  வாழ்த்து தெரிவித்து தனது மனைவி நயன்தாரா மற்றும் இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதில் இரட்டை குழந்தைகளை உயிர், உலகம் எனக் குறிப்பிட்டு நயன்தாரா விக்கி குடும்பத்தினரின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

Begam