Connect with us

மொத்த பார்வையும் இவுங்க மேல தான்.. ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு டிரான்ஸ்பரென்ட் சேலையில் வந்த நயன்.. வைரலாகும் போட்டோஸ்..

CINEMA

மொத்த பார்வையும் இவுங்க மேல தான்.. ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு டிரான்ஸ்பரென்ட் சேலையில் வந்த நயன்.. வைரலாகும் போட்டோஸ்..

 

டிரான்ஸ்பரென்ட் சேலையில் நேற்று நடைபெற்ற நேசிப்பாயா என்ற திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. பொதுவாக தனது தயாரிப்பு படங்களைத் தவிர எந்த ஒரு படத்தின் ப்ரோமோஷனுக்கும் அவர் சென்றதில்லை. இப்படி இருக்கையில் நேற்று நடைபெற்ற நேசிப்பாயா என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் நிகழ்ச்சியில் வந்து இருந்தது ரசிகர்களை மட்டுமல்லாமல் திரையுலகினரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளியின் தம்பியான ஆகாஷ் முரளி நடித்திருக்கும் திரைப்படம் தான் நேசிப்பாயா. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருக்கின்றார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் லான்ச் நேற்று நடைபெற்றது.

இதனை ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இதில் நடிகை நயன்தாராவும் கலந்து கொண்டிருந்தார். நடிகை நயன்தாரா இதற்கு முன்னதாக இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் அதர்வா அவருக்கு அக்காவாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவரின் தம்பி ஆகாஷ் முரளி முதன்முதலாக அறிமுகமாகும் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு நடிகை நயன்தாரா பங்கேற்று இருந்தார்.

அது மட்டும் இல்லாமல் நடிகர் ஆர்யாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். பொதுவாக எந்த பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் பல கேள்விகள் எழும் என்பதை புரிந்து கொண்ட நயன்தாரா பிரமோஷன் நிகழ்ச்சியிலேயே இதற்கான விளக்கத்தையும் கொடுத்துவிட்டார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய இவர் விஷ்ணுவர்தன் சார் இயக்கத்தில் பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்துள்ளேன். அதுமட்டுமில்லாமல் அவர் எனக்கு மிகச்சிறந்த நண்பர். இந்த டீமில் இருக்கும் அனைவரையும் எனக்கு நன்றாக தெரியும். ஒரு நட்புக்காக தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றேன் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

இருப்பினும் நடிகை நயன்தாரா டிரான்ஸ்பரென்ட் சேலையில் பார்ப்பதற்கு செம க்யூட்டாக வந்திருந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top