CINEMA
ரொம்ப மோசமா பேசிட்டாங்க.. இதுபோல எனக்கு எங்கயும் நடக்கல.. பரபரப்பை கிளப்பிய நடிகை நமீதா..!
தமிழ் சினிமாவில் தன்னுடைய கவர்ச்சி நடனத்தால் ஒட்டுமொத்த இளசுகளையும் கட்டிப் போட்டவர் தான் நடிகை நமீதா. எங்கள் அண்ணா என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஹீரோயினியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஐட்டம் பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். அனைவரையும் மச்சான் என்று சொல்வதில் இருந்து இவர் மேலும் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார். சினிமாவின் உச்சத்திற்கு சென்ற இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போக ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கு கொண்டு அதன் மூலமும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார்.
பிறகு இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். மறுபக்கம் அரசியலிலும் நமீதா கவனம் செலுத்தி வருகின்றார். தனக்கு ஏற்றது போல முக்கியமான கதாபாத்திரம் வந்தால் நடிப்பேன் என்று சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் நமீதா தனது கணவருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அங்கு பெண் காவல் அதிகாரி ஒருவர் நமீதாவிடம் நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர் எந்த வகுப்பை சேர்ந்தவர் என்று கேள்விகளை கேட்டதாக அவர் மீது நமீதா புகார் அளித்துள்ளார். நான் இந்து மதத்தை சேர்ந்தவள், என்னுடைய திருமணம் திருப்பதியில் தான் நடந்தது. என் குழந்தைகளுக்கு கூட கிருஷ்ணனின் பெயர்தான் வைத்துள்ளேன். இருந்தாலும் கோவில் நிர்வாகம் என்னிடம் வந்து இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்கின்றனர்.
கோவில்களில் இது போன்ற நடவடிக்கைகள் நடப்பது தனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என்று நமீதா அந்த வீடியோவில் பேசியுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல கோவில்களுக்கு சென்று இருப்பதாகவும் இந்த மாதிரி ஒரு கேள்வியை கூட எந்த கோவிலிலும் தன்னிடம் இதுவரை யாரும் கேட்டதில்லை என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும் அமைச்சர் சேகர்பாபுவிடம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நமீதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கோவில் நிர்வாகம், மேல் அதிகாரிகளிடம் கேட்டுவிட்டு கோவிலுக்குள் அனுமதிக்கிறோம் சிறிது நேரம் காத்திருக்குமாறு நமிதாவிடம் கூறியதாகவும் மீனாட்சி அம்மன் கோவிலில் இந்துக்களை மட்டும் அனுமதித்து வருகிறோம். நமீதாவிடம் காட்டமாக நடந்து கொள்ளவில்லை. கோவில் விதிகளின்படி தான் பேசினோம். கோவில் இணை ஆணையர் கிருஷ்ணனிடம் கேட்டு பிறகு நமீதாவை அனுமதித்தோம் என கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க