
CINEMA
‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த நடிகை மிர்னா மேனன் வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?… ஷாக்கில் ரசிகர்கள்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, மிர்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்யாத மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது. ஒரே வாரத்தில் உலக அளவில் 375.40 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் ஒரே வாரத்தில் எந்த அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வசூல் செய்ததில்லை
தலைவரின் ‘ஜெயிலர்’ திரைப்படம், வெளியாகி 2 வாரங்களை எட்ட உள்ள நிலையில், ரசிகர்கள் பலர் தொடர்ந்து இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே ஜெயிலர் படத்தின் வசூல் 600 கோடியை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இத்திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் சம்பள விவரங்களும் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்தவகையில் தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகள் ரோலில் நடிக்க நடிகை மிர்னா மேனன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை இவர் சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.