டப்ஸ்மாஷ் செயலி மூலம் பாப்புலராகி அதன் மூலம் சினிமா வாய்ப்புகள் கிடைத்த பல பேர்களில் ஒருவர் மிர்னாலினி. இவர் டப்ஸ்மாஷ் என்ற செயலி மிகவும் பாப்புலராக இருந்த சமயத்தில் அந்த செயலியில் வீடியோ மூலம் டான்ஸ் ஆடியும் பாட்டு பாடியும் தங்களின் திறமைகளை சமூக வலைதளங்களில் பரப்பி வந்துள்ளனர். இதன் மூலம் சினி துறையில் வாய்ப்புகள் கிடைத்து பலரும் சினிமா படங்களில் நடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை மிர்னாலினி வாய்ப்புகள் கிடைத்தது. 2019 ஆம் ஆண்டில் “கடலக்கொண்ட கணேஷ் ” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “சூப்பர் டீலக்ஸ்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
அதனை அடுத்து எம்ஜிஆர் மகன், கோப்ரா, எனிமி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக உள்ள “ரோமியோ” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதில் முதலிரவில் விஜய் ஆண்டனி கையில் செம்பும்; மிர்னாலினி கையில் விஸ்கி பாட்டிலுடன் இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் போஸ்டரே இப்படின்னா படம் இருக்கும் என்று கமண்ட் செய்து வருகிறார்கள்.