கருப்பு நிற உடையில் ரசிகர்களை மயக்கும் நடிகை மியா ஜார்ஜின்…. க்யூட் புகைப்படங்கள் இதோ….!!!!

By Nanthini

Published on:

தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த கேரளத்து பைங்கிளி தான் நடிகை மியா சார்ஜ். அமர காவியம் திரைப்படத்தில் ஆர்யாவின் தம்பிக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார். மும்பையில் பிறந்து கேரளாவில் வளர்ந்த இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு திரையுலகில் நுழைந்தார்.

   

அதனைத் தொடர்ந்து நேற்று இன்று நாளை என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அந்த திரைப்படத்தின் மூலம் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் எப்போதுமே நேர்த்தியான கதைகளை மட்டுமே தேர்வு செய்து பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

இவர் வெற்றிவேல் திரைப்படத்திலும் மலையாள பெண்ணாக நடித்து தனது அழகான பேச்சால் ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது வழக்கம்.

அவ்வகையில் தற்போது க்யூட்டான லுக்கில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

author avatar
Nanthini