“பொண்ணு மாப்ள ஜோரு, ஒன்னா சேருது பாரு”.. மெஹந்தி கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்த நடிகை மேகா ஆகாஷ்..!

By Nanthini on செப்டம்பர் 14, 2024

Spread the love

நடிகை மேகா ஆகாஷ் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிசியான நடிகையாக நடித்து வருகிறார். இவர் தமிழில் ரஜினியின் பேட்ட திரைப்படம் மூலமாக என்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்து சிம்பு மற்றும் தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

   

தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரஜினியுடன் இணைந்து நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்ததாக வந்தா ராஜாவா தான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இவர் நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

   

 

தற்போது தெலுங்கில் பெயரிடப்படாத இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சாய் விஷ்ணுவுடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக புகைப்படங்களுடன் தகவலை பகிர்ந்து இருந்தார் மேகா ஆகாஷ். இவர்கள் இருவரும் பேசினால் போதும் அன்பே என்ற குறும்படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர்.

தன் திருமணம் குறித்து மனம் திறந்து உள்ள மேகா, சாய் விஷ்ணுவை கடந்த 9 ஆண்டுகளாக தனக்கு தெரியும் என்றும் தன்னுடைய நெருங்கிய தோழியின் சகோதரரான அவரை தான் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் ஃபிலிம் மேக்கிங் படித்துள்ளார் சாய் விஷ்ணு. இவர் பா ரஞ்சித்தின் காலா மற்றும் கபாலி உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இவருக்கு எப்போதுமே சினிமா மீதுதான் ஆர்வம் அதிகம் என்ற போதிலும் தற்போது பிசினஸை கவனித்து வருவதாக மேகா ஆகாஷ் தெரிவித்துள்ளார். தங்களின் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் உள்ளிட்ட அனைத்தையும் முன்னதாக சரியான திட்டமிடலுடன் எதிர் கொண்டதாக கூறியுள்ளார். சாய் விஷ்ணு முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து மேகா ஆகாஷ் மற்றும் சாய் விஷ்ணு ஜோடியின் திருமணம் வருகின்ற செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இவர்களுடைய திருமணத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது விறுவிறுப்பாக தனது காதல் கணவரோடு இணைந்து தனது திருமணத்திற்கு தயாராகி வரும் மேகா ஆகாஷ் தனக்கு நடந்த மெஹந்தி சடங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

author avatar
Nanthini