நடிகை மீனா ஜீன்ஸ் டி-ஷர்ட் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் 40 வருடத்திற்கும் மேலாக சிறந்த நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. 90’ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கனியாக வளம் வந்த இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில், அதுவும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தமிழில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித், முரளி, கார்த்திக் உள்ளிட்ட பல நடிகருடன் ஜோடி போட்டு நடித்தார். சினிமாவில் சிறந்த நடிகையாக வளம் வந்த இவர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்ட மீனா குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். எதிர்பாராத விதமாக சமீபத்தில் அவரது கணவர் வித்யாசாகர் மரணம் அடைந்தார்.

இந்த சம்பவம் அவரின் மிகப்பெரிய அளவில் பாதித்தது. இதனால் வீட்டிலேயே முடங்கி கிடந்த அவரை அவரது நண்பர்கள் தேற்றினார்கள்.

தற்போது மீண்டும் படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கும் மீனா சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகின்றார்.

47 வயதான போதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் மாடன் உடையில் வளம் வருகின்றார். அந்த வகையில் தற்போது நடிகை மீனா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

