புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸை வெளிநாட்டில் கொண்டாடி மகிழும் நடிகை மீனா!… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ இதோ!…

புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸை வெளிநாட்டில் கொண்டாடி மகிழும் நடிகை மீனா!… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ இதோ!…

நடிகை மீனா புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் வெளிநாட்டில் கொண்டாடி வருகிறார். தற்பொழுது அவரே இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. இவர் 90களில் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கட்டி இழுத்தவர். நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கி முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இவர் நடிப்பில் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்பொழுது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார். நடிகை மீனா வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகள் உள்ளார்.

அம்மாவைப் போன்றே மகளும் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் கால் பதித்தார். நடிகர் விஜயின் ‘தெறி’ திரைப்படத்தில் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கொரோனாவால் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று ஏற்பட திடீரென உயிரிழந்தார்.

தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நடிகை மீனா கணவரின் இறப்பிலிருந்து மீண்டு வருகிறார். நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்ய போவதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையான தகவல் இல்லை என அவரே சமீபத்தில் தெரிவித்தார்.

சமீபத்தில் நடிகை மீனா விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்பொழுது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை நடிகை மீனா வெளிநாட்டில் கொண்டாடி வருகிறார். அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

வைரலாகும் அந்த வீடியோ இதோ….

Begam