துணிவு பட நடிகை மஞ்சுவாரியாரின் அம்மா மற்றும் சகோதரர் இவர்கள் தானா?… இத்தனை நாளா இது தெரியாம போச்சே…

By Begam

Published on:

மலையாளத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியார். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். நடிகர் அஜித் நடிப்பில் ரிலீசாகி சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் துணிவு. இத்திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார் நடிகை மஞ்சு வாரியார்.

   

இதைத்தொடர்ந்து தற்பொழுது அவர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிகர் அஜித் உடன் இணைந்து நடித்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து தமிழில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆசை என்றும் கூறியிருந்தார்.

நடிகை மஞ்சு வாரியர் கடந்த 1998ம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மீனாட்சி எனும் ஒரு மகளும் உள்ளார். பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் 2015ல் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இவர் தனது விவாகரத்துக்கு பிறகு தனது அம்மாவுடன் தான் வசித்து வருகிறார். தற்பொழுது அவரது தாயார் மலையாளத்தில் ஒரு புத்தகம் ஒன்று எழுதியுள்ளாராம். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவரது தாயார் மற்றும் சகோதரரின் புகைப்படங்களை தற்போது இணையத்தில் பதிவு செய்துள்ளார் நடிகை மஞ்சுவாரியார்.