நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மணிரத்தினத்துடன் ‘பம்பாய்’ பட நடிகை… வைரல் கிளிக்ஸ்..

By Begam

Updated on:

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பாம்பாய்’ திரைப்படத்தின் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மனிஷா கொய்ராலா.

   

தனது முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த மனிஷா கொய்ராலாவுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இயக்குனர்கள் மற்றும் நடிகர்களும் படங்களில் வாய்ப்பை அள்ளி கொடுத்தனர்.

அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன், முதல்வன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

அதன்பிறகு தென்னிந்தியத் திரையுலகில் ஒரு ரவுண்டு அடித்த மனிஷா கொய்ராலா கொடிகட்டி பறந்தார்.

இப்படி வலம் வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் நடிகை வாய்ப்பு குறையவே அவர் அடுத்தடுத்து வித்தியாசமான ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வில்லியாகவும், சித்தியாகும், அம்மாவாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனது திறமையை நிரூபித்தார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை மனிஷா கொய்ராலா.

இவர் தற்பொழுது இயக்குனர் மணிரத்தினம் மற்றும் அவரது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.